நடிகர் பரத்தின் மகன்களை பார்த்துள்ளீர்களா..? இதோ வைரல்புகைப்படம்.!!
நடிகர் பரத்தின் இரண்டு மகன்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். இந்த படத்தை தொடர்ந்து தனக்கான கதையை சரியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது, அறிமுக இயக்குனர் எம். சக்தி வேல் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் பரத்துக்கு ஜோடியாக நடிகை வணிபோஜன் நடிக்கிறார்.
இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜெஸ்லி ஜோஷ்வா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரத் தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நடிகர் பரத்துடைய மகன்களா என்று கேட்டு வருகின்றார்கள். இதோ அந்த அழகிய புகைப்படம்.