மாஸ்டர் பட ஹீரோயினின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா.?

Default Image

மாளவிகா மோகனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   தனது அம்மாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகன்.  கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். இந்தப் படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக படப் பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கென்று ரசிகர் பட்டாளம் நிறையவே உண்டு. அதற்கு இவரது கவர்ச்சியான போட்டோஷூட் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து அனைத்து பிரபலங்களும் தங்களது தாயின் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியிருந்தனர். அந்த வகையில் மாளவிகா மோகனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   தனது அம்மாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படம் போன்றுள்ளது. தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Amma ♥️

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்