கோதுமை மிளகு தோசை கேள்விப்பட்டு இருக்கீங்களா…? எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!
காலையில் பலர் கோதுமை உணவுகளை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். காரணம் டயட்டில் இருப்பது தான். ஆனால், தினமும் கோதுமை தோசையை ஒரே சுவையில் சாப்பிட்டால் யாருக்கும் பிடிக்காது. இன்று கோதுமையில் மிளகு சேர்த்து அட்டகாசமான சுவையுடன் வித்தியாசமான முறையில் தோசை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- அரிசி மாவு
- சீரகம்
- மிளகு
- வெங்காயம்
- கறிவேப்பில்லை
- பச்சை மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்துக்கு கிளறி எடுத்து கொள்ளவும்.
தோசை : அதன் பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி, நாம் கலந்து வைத்துள்ள கோதுமை மாவு கலவையை தோசை போல ஊற்றி அதன் மேல் புறம் லேசாக எண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் அட்டகாசமான கோதுமை தோசை வீட்டிலேயே தயார்.