கீரை சாதம் சாப்பிட்டு இருக்கீங்களா …..! எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!
தினமும் புளி குழம்பு, மீன் குழம்பு, சாம்பார் சாப்பிட்டு பலருக்கும் போர் அடித்து போயிருக்கும். எனவே, இவ்வாறு சாப்பிட்டதையே சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் வித்தியாசமான சாதங்களை செய்து சாப்பிடுவது தான் அனைவருக்கும் பிடிக்கும். இன்று எப்படி நாம் சீரக சம்பா அரிசியில் கீரை சாதம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா வடித்த சாதம்
- எண்ணெய்
- கடுகு
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- வெந்தயம்
- இஞ்சி
- தக்காளி
- கருவேப்பிலை
- உப்பு
- மஞ்சள்தூள்
- துவரம் பருப்பு
- அரை கீரை
- மிளகாய்த்தூள்
செய்முறை
தாளிக்க : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் சீரகம், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
விழுது : பின்பு இதனுடன் இஞ்சி, தக்காளி, மஞ்சள்தூள், பொடியாக நறுக்கி அரைக்கீரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இதனுடன் தேவையான அளவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துள்ள துவரம்பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.
சாதம் : 2 நிமிடம் கழித்து வடித்து வைத்துள்ள சீரக சம்பா சாதத்தை கொட்டி கிளறி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான் அட்டகாசமான சீரக சம்பா கீரை சாதம் தயார். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.