பெரும்பாலும் தென் இந்தியர்கள் அனைவருமே காலை உணவுக்கு இட்லி அல்லது தோசை தான் செய்து சாப்பிட்டு வருகிறார்கள். இந்த இட்லியை சாதாரணமாக எப்பொழுதும் போல செய்து சாப்பிடுவதை விட, சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். குறிப்பாக இட்லி 65 செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த இட்லியை வைத்து எப்படி 65 செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கலவை : முதலில் கடலை மாவு, மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தோய்த்து எடுத்து கொள்ளவும்.
பொரியல் : கடலை மாவு கலவையில் தோய்த்து எடுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
தாளிப்பு : பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். விழுது போல நன்கு வதங்கி வந்ததும் ,நாம் பொரித்து எடுத்து வைத்துள்ள இட்லி துண்டுகளை இதில் சேர்த்து நன்றாக கிளறி, மல்லித்தழை தூவி இறக்கி விடவும்.
அவ்வளவு தான் 2 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிட்டால் நாம் வீட்டிலேயே தயாரித்த இட்லி 65 அட்டகாசமாக இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடத் தூண்டும்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…