சிக்கன்ல பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்பிங்க…!!! ஆனா சிக்கன் சூப் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா…?
சிக்கன் கறியில் நாம் பல விதமான, வகை வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. சிக்கனில் செய்யக்கூடிய அனைத்து உணவுகளையும் பலரும் விரும்பி உண்பதுண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பது உண்டு.
ஆனால் சிக்கனில் சூப் செய்து சாப்பிட்டதுண்டா…? இப்பொது சிக்கனில் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- சிக்கன் (எலும்புடன்) – கால் கிலோ
- வெங்காயம் 1 ( நறுக்கியது )
- தக்காளி – 1
- இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- சீரகம் – அரை ஸ்பூன்
- மிளகு தூள் – அரை ஸ்பூன்
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தாளிக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சீரகம், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய பின்பு அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பின்னர் மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேகா விட வேண்டும்.
அதன் பிறகு அதனுடன் கொத்தமல்லி தழையை தூவி சிக்கன் வெந்ததும் இறக்கி குடிக்க வேண்டும். இப்பொது நமக்கு தேவையான சிக்கன் சூப் ரெடி.