ஹாலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகைகளை தகாத முறையில் நடந்து கொண்ட விவகாரம்!மேலும் ஒரு வழக்கு …
அமெரிக்காவின் நியூயார்க் மாகாண அரசு வழக்கறிஞர் படத்தயாரிப்பு நிறுவனத்தின் உயர்பொறுப்பில் இருந்து பாலியல் புகாரால் பதவியிழந்த ஹார்வே வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மிராமேக்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஹார்வே வெயின்ஸ்டீன் படவாய்ப்புகள் தருவதாக கூறி பல முன்னணி நடிகைகள் உள்பட 70 பேரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், பொது இடங்களில் அவமதிக்கப்பட்டு வரும் ஹார்வேவுக்கு எதிராக நியூயார்க் மாகாண அரசு வழக்கறிஞர் எரிக் டி ஸ்னெய்டெர்மேன் (Eric T.Schneiderman), சமூக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் தொழில் உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.