பியார் பிரேமா காதல் பட இயக்குனரான இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள படத்திற்கு “ஸ்டார்” என்ற டைட்டிலை வைத்துள்ளனர் .
கடந்த 2018-ம் ஆண்டு இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் பியார் பிரேமா காதல் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது . ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரட்டாக உள்ளது .மேலும் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக யுவன் சங்கர் ராஜா இயக்குனர் இளனுக்கு கார் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் மீண்டும் பியார் பிரேமா காதல் பட கூட்டணியுடன் மீண்டும் இணைய உள்ளதாக கூறியிருந்தார். இளன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் இணையும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்த தினமான 12:12 மணிக்கு ஹரிஷ் கல்யாண்-இளன்-யுவன் இணையும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தனர் .அதன் படி தற்போது இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் படத்திற்கு “ஸ்டார்” என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டில் லுக்கை வெளியிட்டு ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.வித்தியாசமான லுக்கில் உள்ள ஹரிஷ் கல்யாணின் டைட்டில் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…