சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார் இத்திரைப்படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகம் ஆகியது என்று கூறலாம்.
இந்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று அனைத்து சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு நிலையில் தற்போது அமேசான் பிரைமில் வருகின்ற அக்டோபர் மாதம் 30 ம் தேதி வெளியிடுவதாக நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இதனால் அணைத்து சூர்யா ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர், மேலும் சில பிரபலங்கள் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஒடிடியில் வெளியாவது குறித்து சில கருத்துக்களை கூறிவருகின்றார்கள் அந்த வகையில் இயக்குனர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “ஒரு ரசிகன் உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி எல-யில் அல்ல நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு, தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம்
சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம் தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை படைப்பாளிகளின் கற்பனைக்கும், உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான் இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் , சினிமா இருக்கும் வரை உங்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும் என்று பதிவு செய்துள்ளார்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…