உலகப் புகழ் பெற்ற ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா!

Default Image

இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது.இருந்தபோதிலும் இந்தியாவின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சிறப்பான பங்களிப்பை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அளித்தார்.
ஹர்திக்கின் பேட்டிங் மிக சிறப்பானதாக இருந்ததாகவும் எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்ததாகவும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் க்ளூஸ்னர் புகழ்ந்துள்ளார்.
தனது பந்து வீச்சில் ஹர்திக் பாண்டிய சிறிய மாற்றங்களை செய்தால் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வருவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சில நேரங்களில் அவர் பங்களிக்கத் தவறுவதால் அவரை விமர்சிக்கக்கூடாது என்றும் ஊக்கமளித்து உத்வேகப்படுத்தினால் அவர் பிரகாசிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர்களில் குறிப்பிடத்தக்க வீரராக விளங்கிய லான்ஸ் குளூஸ்னர், ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து பேசியுள்ளது அவருக்கு நிச்சயம் ஊக்கம் அளித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்