அன்பின் ஆளுமைகளாக வாழும் அனைத்து பெண் சக்திகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.!
கவிஞர் சினேகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதி தனது மகளிர் வாழ்த்துக்களை பெண்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி அதாவது இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அனைவரும் தங்களுக்கு பிடித்த பெண்கள் , தங்கைகள், அம்மா, மனைவி என அனைவர்க்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு சினமா பிரபலங்களுக்கும் கவிதைகளை எழுதி பெண்களிற்கு உற்சாகம் அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், கவிஞர் சினேகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதி தனது மகளிர் வாழ்த்துக்களை பெண்களுக்கு தெரிவித்துள்ளார். ” அன்னையில் தொடங்கி பிள்ளைகளின் பிள்ளைகள் வரை தொடர்கின்ற அன்பின் ஆளுமைகளாக வாழும் அனைத்து பெண் சக்திகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ” என்று தெரிவித்துள்ளார்.
அன்னையில் தொடங்கி பிள்ளைகளின்
பிள்ளைகள் வரை தொடர்கின்ற
அன்பின் ஆளுமைகளாக
வாழும் அனைத்து
பெண் சக்திகளுக்கும்
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.— Snehan (@SnehanMNM) March 8, 2021