அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை தொடர்ந்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து சென்றார். அதனை சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பங்கமாக கலாய்த்தார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து, இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இவர் ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக சிறுமி கிரெட்டா விமர்சித்து பேசினார்.
மேலும், அமெரிக்காவில் காலநிலை குறித்து நடந்த உச்சி மாநாட்டில் இவர் “உங்களுக்கு எவ்வளவு தைரியம்” என்று கேட்டார். அதன்பின் இவரை தெரியாத நபரே இல்லை. இவருக்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கும் அடிக்கடி மோதல் நடக்கும். அந்தவகையில், 2019-ஆம் ஆண்டின் “Person of the Year” என டைம் பத்திரிகை கிரேட்டா தன்பெர்க்கை பாராட்டியபோது டிரம்ப், “தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். Chill Greta, Chill” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு, சர்ச்சையை கிளப்பியது.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகிய நேரத்தில் டிரம்ப் “வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது கிரெட்டா துன்பெர்க், “சில் டொனால்ட் சில் (Chill Donald, Chill..!)” என பதிவிட்டு, பதிலுக்கு டிரம்பை கலாய்த்தார். இந்த பதிவு, சமூகவலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை தொடர்ந்து டிரம்ப், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ஹெலிகாப்டரில் வெள்ளை மாளிகையில் இருந்து சென்றார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கிரெட்டா, அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். அந்த பதிவில், அருமையான எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஒரு மகிழ்ச்சியான முதியவராக டிரம்ப் காட்சி அளிக்கிறார். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, தற்பொழுது 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதற்கு டிரம்ப், தற்பொழுது பதிலளிக்க முடியாது. அதற்கு காரணம், அவரின் ட்விட்டர் அக்கவுன்ட் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…