வெளியேறிய டிரம்ப்; கலாய்த்த 18 வயது சிறுமி.. பதிலளிக்க முடியாமல் திணறும் டிரம்ப்!

Default Image

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை தொடர்ந்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து சென்றார். அதனை சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பங்கமாக கலாய்த்தார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து, இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இவர் ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக சிறுமி கிரெட்டா விமர்சித்து பேசினார்.

மேலும், அமெரிக்காவில் காலநிலை குறித்து நடந்த உச்சி மாநாட்டில் இவர் “உங்களுக்கு எவ்வளவு தைரியம்” என்று கேட்டார். அதன்பின் இவரை தெரியாத நபரே இல்லை. இவருக்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கும் அடிக்கடி மோதல் நடக்கும். அந்தவகையில், 2019-ஆம் ஆண்டின் “Person of the Year” என டைம் பத்திரிகை கிரேட்டா தன்பெர்க்கை பாராட்டியபோது டிரம்ப், “தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். Chill Greta, Chill” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு, சர்ச்சையை கிளப்பியது.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகிய நேரத்தில் டிரம்ப் “வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது கிரெட்டா துன்பெர்க், “சில் டொனால்ட் சில் (Chill Donald, Chill..!)” என பதிவிட்டு, பதிலுக்கு டிரம்பை கலாய்த்தார். இந்த பதிவு, சமூகவலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை தொடர்ந்து டிரம்ப், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ஹெலிகாப்டரில் வெள்ளை மாளிகையில் இருந்து சென்றார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கிரெட்டா, அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். அந்த பதிவில், அருமையான எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஒரு மகிழ்ச்சியான முதியவராக டிரம்ப் காட்சி அளிக்கிறார். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, தற்பொழுது 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதற்கு டிரம்ப், தற்பொழுது பதிலளிக்க முடியாது. அதற்கு காரணம், அவரின் ட்விட்டர் அக்கவுன்ட் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்