தேர்வு இல்லாமலேயே இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, MBBS பட்டம் வழங்க உக்ரைன் அரசு முடிவு.
லைசன்ஸ் தேர்வு ரத்து:
உக்ரைனில் மருத்துவம் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு எனப்படும் இறுதித் தேர்வை நடத்தாமலேயே எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. மருத்துவம் படித்த ஐந்தாவது ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் மற்றும் KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
MBBS பட்டம்:
மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-1 தேர்வை ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டதாக உக்ரைன் பல்கலைகழகங்கள் தெரிவித்துள்ளது. 5-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. போர் சூழல் காரணமாக லைசன்ஸ் தேர்வு எழுதாமலேயே மருத்துவ படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் (MBBS பட்டம்) வழங்கப்படும்.
மாணவர்கள் நிம்மதி:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள், அவர்களது சொந்த நாட்டிற்கு திரும்பிய நிலையில், இந்த அறிவிப்பு சற்று நிம்மதியை தருவதாக மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்வு ரத்து குறித்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…