என் favourite ஹீரோ தல அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – லைலா..!!

அஜித்திற்கு நடிகை லைலா தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று மே 1 ஆம் தேதியான உழைப்பாளர் தினத்தில் நடிகர் அஜித் தனது 50 வது பிறந்தநாளை வரும் கொண்டாடி வருகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜித், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலிப்பதற்குக் காரணம் அவரது கடின உழைப்பு தான். இவரது திரை வாழ்க்கை வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கொண்டது. அஜித் பிறந்த நாளைமுன்னிட்டு ரசிகர்கள் #HBDThalaAjith என்ற ஹேஸ்டேக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர். ரசிகர் மன்றம் இல்லாமல் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.
இந்த நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அஜித்துக்கு ஜோடியாக தீனா, பரமசிவன், திருப்பதி ஆகிய படங்களில் நடித்த லைலா அஜித்திற்கு பிறந்த நாள் தெரிவித்துள்ளார்.
“என் favourite ஹீரோ தல அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” : நடிகை லைலா#Valimai #AjithKumar pic.twitter.com/vpemK1TdpJ
— Ajith Network (@TeamAKnetwork) May 1, 2021