இந்திய சினிமாவின் Mr.பிரமாண்டம்! சமூக அக்கறையுள்ள முதல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Published by
மணிகண்டன்

பிரமாண்ட இயக்குனர் என இவரை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும். அந்த பிரமாண்டத்தை பற்றி அவர் கூறுகையில் அந்த கதை களமும் காட்சியமைப்பும் அதற்கான தேவைகளை எடுத்து கொள்கிறது.  என கூறி விடுவார். ஆம். அது உண்மையே அவருடைய படங்களை பார்க்கையில், அதில் ஒவ்வொரு பிரமாண்ட காட்சியும் கதைக்கு தேவை என்பதும் தேவையில்லாமல் எந்த காட்சியும் வரவில்லை எனவும் நமக்கு புலப்படும்.

 

அவர் யோசிக்கும் காட்சிகளும், பாத்திர படைப்புகளும் அதற்க்கான தேவைகளை எடுத்து கொள்கிறது என்பதே நிதர்சனம். படம் தமிழ் படங்களை இந்திய சினிமாவரை உயர்த்தியது. இந்திய சினிமா எடுக்கையில் அதனை உலக அரங்கில் கொண்டு செல்வது. என இவர் எட்டிப்பிடித்த தூரம் இவரது சிந்தனைக்கு நிகரானவையே என்பது உண்மை. இன்னும் அவர் எந்த உயரத்தை தனது இலக்காக வைக்க போகிறார்? அவர் தொடாத உயரம் என்ன என நாம் நினைக்கையில் அதனை தாண்டிதான் அவரது இலக்கு நிச்சயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

அவரது முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் ஏழை மாணவர்களின் கல்வி கனவுகளில் பணமும் அரசியலும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது முதல், கடைசியாக வெளியான 2.Oவில், அதீத வளர்ச்சி பெற்ற டெக்னாலஜி நம்மையும் நம்மை சுற்றியுள்ள உயிரினனங்களையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது வரை தனது ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை ஆழமாக பதிய வைத்து வந்துள்ளார். இந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். 

கல்வி  (ஜென்டில் மேன் ), லஞ்சம் ஊழல் (இந்தியன் ), ஒரு நாள் முதல்வர்(முதல்வன்), தனி நபர் அலட்சியம் ( அந்நியன்), தற்கால மாணவர்கள் ( பாய்ஸ் ),கருப்பு பணம் ( சிவாஜி), எந்திரமயம் ( எந்திரன்), டெக்னலாஜியினால் ஏற்பட்ட பாதிப்புகள் ( 2.O) என ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ஒரு சமூக கருத்தை தனது ஸ்டைலில் நம் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறார் இயக்குனர் ஷங்கர்.

இந்திய சினிமாவின் பிரமாண்ட சொத்து தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசிக்க படும் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தினச்சுவடு சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

6 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

6 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

6 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

6 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

7 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

7 hours ago