ஹேப்பி பர்த்டே கமல் சார்.! உலகநாயகனிடம் ட்ரீட் கேட்ட பிக்பாஸ்.!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ட்ரீட் எங்கே என்று பிக்பாஸ் கேட்டுள்ளார்.

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் உலகநாயகனுக்கு பிக்பாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பிக்பாஸ் அவர்கள் ஹேப்பி பர்த்டே கமல் சார் என்று கூறி ட்ரீட் எங்கே என்று கேட்கிறார். அதற்கு கமல்ஹாசன் நான் அனைவரையும் சமமாகவும்,  மரியாதையுடன் நடத்துவதாகவும், திரும்ப அதையே நான் எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார் .  அதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பிறந்து நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க லவ் யூ ஆல் என்று கூறுகிறார். இன்றைய பிக்பாஸ் மேடை மிகவும் சூப்பராக இருப்பதால் கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் லிஸ்டில் உள்ள யார் யார் வீட்டினுள் தங்க வைக்கப்படுவார் என்றும் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்