உலகநாயகனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய அசால்ட் சேது!
ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக தோன்றி மிரட்டலான நடிப்பின் மூலம் இன்றளவும் பேசப்பட்டு வரும் நடிகர் பாபி சிம்ஹா. இவர் அந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கூட வாங்கினார். பின்னர் பல படங்களில் நடித்து வந்தார். சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.
இவர் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பட ஷூட்டிங்கின் இடைவெளியில் நேற்று இயக்குனர் ஷங்கர் முன்னிலையில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த புகைப்படம் தற்போது வைராகி வருகிறது.