முழு படத்தை ஒரு வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா..!

ஒரே வாரத்தில் முழு படத்தையும் நடிகை ஹன்சிகா நடித்து முடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஹன்சிகா தற்போது ‘105 மினிட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜா துஷ்ஷா இயக்கியுள்ளார். இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது இந்த படத்தின் பின்னணி பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை ஹன்சிகா ஒரே வாரத்தில் நடித்து முடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025