சீனாவில் ஹாண்டா வைரஸ் – ஆனால், அச்சம் தேவையில்லை!
சீனாவில் உருவாக்கி அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று தற்போது இத்தாலி, இந்தியா, இலங்கை என பல நாடுகளில் பரவி வரும் உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும், தோற்று உள்ளவர்களுக்கு அருகில் இருப்பதாலும் பரவுகிறது.
இந்த வைரஸால் தற்போது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸின் தாக்கமே இன்னும் முடிவாகாத நிலையில் தற்போது ஹாண்டா வைரஸ் எனும் புது வைரஸால் சீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளது.
ஆனால் இந்த ஹாண்டா வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை. ஏனென்றால் இந்த வைரஸ் எலியிலிருந்து தான் மனிதனுக்கு பரவுகிறதாம். இந்த ஹாண்டா வைரஸ் தொற்று கொண்ட மனிதரிடமிருந்து மற்ற மனிதனுக்கு இந்த வைரஸ் பரவாது என உறுதி செய்யப்பட்டுள்ளது.