ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் ட்ரோன் தாக்குதலில் மரணம்!
பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இஸ்ரேலில் இருந்து பலரை பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் இருபுறமும் போருக்கு வழிவகுத்தது. இதனால், காசாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்து உணவின்றி தவிக்கும் நிலை உருவானது.
அன்று முதல் இன்று வரை ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்தது.
ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால், பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 87வது நாளாக நீடித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் பதற்றம்!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21, 978 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23, 436-ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், இருதரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் ராணுவம், ஆளில்லா விமானம் மூலம் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியது.
இதில், ஹமாஸ் அமைப்பின் மூத்த மற்றும் துணை தலைவரான சலே அல் அரூரி உள்பட 5 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸின் சக்திவாய்ந்த மூத்த தலைவரான சலே அல்-அரூரி, இஸ்ரேலியன் உளவுப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த போரின்போது காஸாவில் ஹமாஸ் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால், தற்போது ட்ரோன் தாக்குதலில் சலே அல்-அரூரி கொல்லப்பட்ட மிக உயர்ந்த நபர் ஆவார். லெபனானில் உள்ள இரண்டாவது பாதுகாப்பு அதிகாரி அரூரி கொல்லப்பட்ட தகவலை இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி உறுதி செய்தார் குறிப்பிடத்தக்கது.
BREAKING: Senior Hamas leader, Saleh al-Arouri, was eliminated in the southern Beirut suburb of Dahiyeh – a stronghold of Hezbollah.
He had the blood of many innocent civilians on his hands.
Today justice was served. Terrorists are not safe. pic.twitter.com/1BSR1xcQAc
— Hananya Naftali (@HananyaNaftali) January 2, 2024