FIFA World Cup 2018:முதல் பாதியை தவறவிட்ட பிரான்ஸ்-ஆஸ்திரேலியா!கோல் எதுவும் அடிக்காமல் திணறல்!
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.
இந்நிலையில் இன்று பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஹீயூகோ லோலிஸ் தலைமையில் பிரான்ஸ் அணியில் நட்சத்திர வீரர் கிரீஸ்மேன், பஷல்போக்பா, ரபெல் வரேன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. தன்னைவிட பலம் குறைந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதில் பிரான்சுக்கு சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது.
தர வரிசையில் 40-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியில் டாம் காஹில், மைக் ஜெடினக் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அந்த அணி பிரான்சுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.
தற்போது பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே ஒரு கோல் கூட இது வரைக்கும் அடிக்கவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.