கொரோனா அச்சத்தால் அரை நூற்றாண்டுக்கு பின்னர் முதல் முறையாக நோபல் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு. 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020-ம் ஆண்டின் நோபல் பரிசுக்கான விருந்து ரத்து செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை செவ்வாயன்று ஸ்வீடிஷ் நாளேடான டேஜென்ஸ் நைஹெட்டர் தெரிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றவர்களை அறிவித்த பின்னர், அவர்களுக்கான விருந்து ஒன்று நடைபெறும். பொதுவாக டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் இந்த விருந்தில் சுமார் 1,300 பேர் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேச இயலாது மற்றும் ஸ்வீடன் வரை பயணிக்க முடியுமா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என நோபல் அறக்கட்டளையின் தலைவர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் டேகன்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடைசியாக இந்த விருந்து 1956-ல் சோவியத் யூனியன் ஹங்கேரி மீது படையெடுப்பதை எதிர்த்து ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக இரண்டு உலகப் போரின் போதும் கைவிடப்பட்டது. தற்போது அரை நூற்றாண்டுக்கு பின்னர் முதல் முறையாக கொரோனா அச்சத்தால் நோபல் விருந்து ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…