ஹஜ் புனிதப் பயணம் இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி..சவுதி அரேபியா முக்கிய அறிவிப்பு.!
இஸ்லாமியர்களின் முக்கிய தொழுகைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் குறித்து சவுதி அரசு ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளது.
ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருவதுண்டு . ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் 1.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனாவுக்கு 1,307 பேர் உயிரிழந்துள்ளனர். 1,05 சவுதி லட்சம் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் அரேபியாவில் கொரோனா வைரஸ்பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த சில மாதங்களாக மெக்கா, காபா மசூதிகளில் தொழுகை நடத்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஹஜ் புனிதப் பயணம் செல்லவும் எந்த வெளிநாட்டினருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
ஹஜ் புனிதப் பயணம் இந்த ஆண்டு ரத்து செய்யவில்லை என்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டில் தங்கி உள்ளவர்களுக்கு மட்டும் குறைந்த அளவில் தொழுகைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.