ஹைட்டி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,248 ஆக உயர்வு!

ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 2,248 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைட்டியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது.
இப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக 2,248 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12,763 பேர் காயமடைந்துள்ளதாகவும் நேற்று அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 80 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025