முடி வெட்டியதால் கொலை மிரட்டல்..! தயாரிப்பாளர் மீது நடிகர் ஷேன் நிகம் புகார்..!

மலையாள திரையுலகில் இளம் நடிகரான ஷேன் நிகம் “கும்பளங்கி நைட்ஸ்” , “கிசுமத்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் “வெயில்” , ” குர்பானி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மலையாள நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நான் “வெயில்” , ” குர்பானி” ஆகிய படங்கள் நடித்து வருகிறேன். “வெயில்” படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் “குர்பானி” படத்தில் நடித்து வருகிறேன். எனது கெட்டப்பை மாற்ற வேண்டும் என குர்பானி பட இயக்குனர் கூறினார். இதை தொடர்ந்து நான் “வெயில்” பட குழுவின் அனுமதி பெற்று பின்னர் முடிவெட்ட முடிவு செய்தோம்.
பின்னர் எனது புது கெட்டப்பின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பினேன். இதைப் பார்த்த “வெயில்” திரைப்பட தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் முடி வெட்டியதால் உங்கள் கதாபாத்திரத்தில் தொடர்ந்து தொடர்பு இருக்காது எனக் கூறி செல்போனில் திட்டியுள்ளார்.
மேலும் உன்னை வாழ விடமாட்டேன் என மிரட்டி உள்ளதாக கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் பேசிய தொலை பேசி பேச்சையும் ஆதாரமாக ஷேன் நிகம் கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் இந்த புகாரை தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் மறுத்துள்ளார். “வெயில்” திரைப்படம் முடியும் வரை முடி வெட்ட கூடாது என ஒப்பந்தம் போட்டோம். அதை மீறி ஷேன் நிகம் முடி வெட்டி உள்ளார். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நான் இந்த படத்திற்காக வட்டிக்கு கடன் வாங்கி படத்தை எடுத்து வருகிறேன். நான் அவரை மிரட்டவில்லை. எனது “வெயில்” திரைப்படத்தை முடித்து தராமல் அவரை இழுத்துக் கொண்டே இருக்கிறார் எனக் கூறினார். இதனால் கேரளா சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.