கிரிப்டோவில் 80 மில்லியனை டாலரை திருடிய ஹேக்கர்கள்..,கெஞ்சும் கிரிப்டோ நிறுவனம்!

Default Image

பிரபல கிரிப்டோகரன்சி தளமான க்யூபிட் (Qubit) தளத்திடமிருந்து 80 மில்லியன் டாலரை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

ஒரு பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) தளமான க்யூபிட் ஃபைனான்ஸ் (Qubit Finance) கிரிப்டோகரன்சி தளத்திலிருந்து 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடிவிட்டனர். மேலும், அந்நிறுவனம் இப்போது திருடப்பட்ட கிரிப்டோகரன்சியைத் திருப்பித் தருமாறு ஹேக்கர்களிடம் கெஞ்சுகிறது.

2022 ஆம் ஆண்டில் திருடப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி ஹேக் இதுவாகும். க்யூபிட் ஃபைனான்ஸ் ஹேக் செய்ததை ஒப்புக் கொண்டது.  Qubit Finance குழு நேரடியாக ஹேக்கரிடம் முறையிட்டுள்ளது. அதில், Qubit நிறுவனத்திற்கு  ஏற்படும் இழப்புகளைக் குறைக்க Qubit Finance குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. Qubit Finance குழு தற்போது பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் பார்ட்னர்ஸ் உடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

DeFi என்பது கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தும் பாதுகாப்பான விநியோகிக்கப்பட்ட பிளாக்செயின் லெட்ஜர்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வளர்ந்து வரும் நிதி தொழில்நுட்பமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்