#SecurityAlert கூகுளின் இந்த செயலியால் உங்களை ஹக்கர்கள் நோட்டமிடுகிறார்கள் எச்சரிக்கை

Published by
Dinasuvadu desk

கூகுளின் கேமரா செயலியின் மூலம் ஹக்கர்கள் உங்களை நோட்டமிடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
செக்மார்க்ஸின் ஆராச்சியாளர்கள் கூகுளை கேமரா செயலியில் ஒரு பிழை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.அதன் மூலம் ஹக்கர்கள்  நம் தொலைபேசியில்  உள்ள கேமராவின் மூலம் நம்முடைய  புகைப்படம் ,வீடியோ நாம் எங்கு இருக்கிறோம் , என்ன செய்கிறோம் என்ற செயல்களை செய்ய முடியும் ,அதுவும் நம் தொலைபேசியை லாக் செய்து வைத்திருந்தாலும் இதை சுலபமாக செய்ய முடியும் என்று செக்மார்க்ஸின் ஆராச்சியாளர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குறைபாடானது கூகுளின் Pixel 2XL மற்றும்  Pixel 3 கைப்பேசிகளில் கண்டறியப்பட்டதாகவும்  இதன் தாக்கம் Samsung தொலைபேசிக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனால் ஆண்ட்ராய்டு பயனர்கள் கலக்கத்தில் உள்ளனர் .
அதன் ஆபத்துகள் இதோ: 

  • உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி உங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும் அதை ஹக்கர்கள் அவர்களது சர்வரில் சேமிக்க முடியும்.
  • உங்கள் ஸ்மார்ட் போனில் முன்பக்க கேமராவுக்கு அருகில் உள்ள சென்சார் உங்களுக்கு அழைப்பு வரும்பொழுது உங்கள் காதுக்கு அருகில் கொண்டு செல்லும் போதும் இயங்கும் அதன் மூலம் நீங்கள் பேசும் அழைப்புகளை ரெகார்ட் செய்ய முடியும்.
  • அப்படி அழைப்புகளை நோட்டமிடும் பொழுதே அதை விடியோவாக பதிவு செய்ய முடியும்
  • நீங்கள் எடுக்கும் புகைப்படத்தின் மூலம் நீங்கள் எங்கு எங்கு செல்கிறீர்கள் என்று கண்காணிக்க முடியும் .
  • உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து விதமான பதிவுகளையும் அவர்களால் நகல் எடுக்க முடியும் .
  • உங்கள் தொலைபேசியின் மூலம் எடுக்கும் புகைப்படம் ,வீடியோ என செய்யப்படும் அணைத்து செயல்களும் உங்கள் ஸ்மார்ட் போன் லாக் செய்து இருந்தாலும் அதை திறக்காமல் நிகழ்த்தப்படும்.
  • மேற்குறிப்பிட்ட செயல்கள் நடப்பது எதுவுமே உங்களுக்கு எவ்வித சந்தேகமோ , எச்சரிக்கையா இல்லாமல் நடக்கும் .

சமீபத்தில் தான் வாட்ஸ் அப் மூலமாக இஸ்ரேலை சேர்ந்த உளவு நிறுவனம் நிகழ்த்திய தொழிநுட்ப தாக்குதல் மூலம் இந்தியாவை சேர்ந்த சில பத்திரிக்கியாளர்கள் ,சமூக ஆர்வலர்கள் ஏன் மம்தா பானர்ஜி,பிரியங்கா காந்தி உட்பட பலர் தங்கள் தொலைபேசிகள் நோட்டமிடப்பட்டதாக தெரிவித்தனர்.இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தனிமனிதரின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

3 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

4 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

5 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

5 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

7 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

7 hours ago