H1B விசாவில் திறமைக்கே முன்னுரிமை….விதிகளை தளர்த்தியது அமெரிக்கா…!!
அமெரிக்காவில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள க்ரீன் கார்டு தொடர்பான புதிய சட்ட மசோதாவின்படி H1B விசாவில் அமெரிக்காவில் பணியில் சேர்ந்த இந்தியா சீனா உள்ளிட்ட நாட்டவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவில் அதிக திறமை உள்ளவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் சட்ட மசோதாவை கடந்த புதனன்று செனட் சபையில் குடியரசு மாற்றும் ஜனநாயக கட்சி சார்பில் அறிமுகப்படுத்தபட்டு இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இதனால் ஒரு நாட்டில் இருந்து குறிப்பிட்ட அளவிலான நபர்கள் மட்டுமே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை ( கிரீன் கார்டு ) பெற முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்கா_வில் இந்தியா , சீனா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் க்ரீன் கார்டு விண்ணப்பித்து பத்தாண்டுகள் காத்திருப்போரின் நிலைமாறும் அதேபோல் முதலில் விண்ணப்பித்தால் முன்னுரிமை என்ற நிலை மாறி தற்போது திறமைகளுக்கு முன்னுரிமை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.