இனி எச்1 பி விசா வைத்திருப்பர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைக்கு தடை.. டிராம்ப் அதிரடி.!
அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன்பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம்.
இந்த “எச்1 பி” விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வருகின்றனர். ஆனால், டிரம்ப் பதவி ஏற்றபிறகு அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “எச்1 பி”விசாவில் பல கட்டுப்பாடுகளை விதித்தார்.
தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக எச்1பி விசா வழங்குவதை இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும் என டிரம்ப் கூறினார். இந்நிலையில், அமெரிக்காவில் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இனி அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஒப்பந்தம் பெறும் நிறுவனங்களில் எச்1 பி விசா (அதாவது வெளிநாட்டினர்) வைத்திருப்பவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஒப்பந்தம் பெறும் நிறுவனங்களில் வெளிநாட்டினரை பணியமர்த்த கூடாது என்ற உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனம், பொருளாதார நெருக்கடி காரணமாக 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, “எச்1 பி” விசா (அதாவது வெளிநாட்டினர்) வைத்திருப்பவர்களை வேலைக்கு எடுத்தது.
இந்த விவகாரம் டிரம்ப் கவனத்திற்கு சென்றதும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.