அமெரிக்காவில் எச்-1 பி விசா, இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், விசா தடை குறித்து அதிருப்தி அளிப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகமாக பெற்று வருகின்றனர். இந்த விசா வைத்துள்ள ஒருவர், 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்க முடியும். அதன் பின் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சட்டமாக உள்ளது.
இதைத்தொடந்து, கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக எச்-1 பி விசா பற்றிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக்கி உள்ளார். இதனால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்-1 பி விசா, இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் அமெரிக்காவில் உள்ள 5 லட்சம் பேருக்கு வேலைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கை குறித்து கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் உலகளவில் சிறந்து விளங்குவதற்கு வெளிநாட்டில் இருந்து பங்களிப்பே அதிகம். வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்களை தடுக்கும் வகையில், எச்-1 பி விசாக்களை தடை செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில், அதற்க்கு அதிருப்தி தெரிவிப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு தனது ஆதரவு தொடரும் எனவும், அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…