எச்.ராஜா மீது வழக்குபதிய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM)சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு …!!
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா,நாகலாந்து ஆகியவைகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் ஆளும் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தோற்கடித்து பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றது.
பின்பு திரிபுராவில் மாமேதை லெனினின் சிலை பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் தகர்க்கப்பட்டது.அப்போது பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ,தெரிவிப்பதும் பதிவிடுவதும் வழக்கம்.இந்நிலையில் அவர் “திரிபுராவில் லெனினின் சிலை தகர்க்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜாதிவெறியன் பெரியார் சிலை” என பதிவிட்டுள்ளார்.
இதனால் தமிழகம் முழுவதும் திராவிட கொள்கையை பின்பற்றும் அதிமுக,திமுக, போன்ற எதிர்கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சியினரும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்குபதிய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM)சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.