மதிமுக – வை சாடிய எச்.ராஜா…!!!
- எச் ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
- மதிமுக கட்சி ஒரு பூஜ்ஜியம் என்று எச் ராஜா தெரிவித்துள்ளார்.
எச் ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், அபிநந்தனை பார்த்து ஒவ்வொரு இளைஞர்களும் தேசபக்தியையும், துணிச்சலையும் கற்றுக்கொள்ள வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.
இந்த பேட்டியில், பாஜக குறித்து கூறிய எச்.ராஜா, மதிமுக தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது என்றும், மதிமுக கட்சி ஒரு பூஜ்ஜியம் என்றும் கூறியுள்ளார். மேலும், ஐஜேகே கட்சி வெளியேறியதால் பாஜகாவுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும், திமுகவுக்கு கூடுதல் பலனும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். .