எச்-1 பி விசா தற்காலிகமாக ரத்து.! டிரம்ப் அதிரடி அறிவிப்பு.!
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த, எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகமாக பெற்று வருகின்றனர்.
இந்த விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்க முடியும். அதன் பின் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. இந்நிலையில், எச்-1 பி விசா வைத்து இருப்பவர்கள் வேறு வேலையைத் தேட வழியில்லை, 60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காக அனுமதியும் கோர முடியாது.
இதைத்தொடந்து, கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக எச்-1 பி விசா பற்றிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக்கி உள்ளார். இதனால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச் 1 பி இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் அமெரிக்காவில் உள்ள 5 லட்சம் பேருக்கு வேலைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் லட்சக்கணக்கானனோர் வேலைகளை இழந்துள்ளனர்.