அமெரிக்கா ஹெச் -பி விசா கால அளவில் புதிய கட்டுப்பாடுகள் !
அமெரிக்கா ஹெச் -பி(H-1B) விசாக்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து பணியமர்த்தப்படும் திறன்மிகு பணியாளர்களுக்கு அமெரிக்காவால் ஹெச் -பி(H-1B) விசா வழங்கப்படுகிறது.
இந்திய மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் சேவையைப் பெறும் நிறுவனங்களுக்கு ” ஆன் சைட் ” பணி என்ற பெயரில் ஊழியர்களை அனுப்பி வைக்கின்றன.
பழைய நடைமுறைப்படி ஆன் சைட் செல்லும் ஊழியர்களுக்கு ஹெச் -பி(H-1B) விசாவுக்கு விண்ணப்பித்தாலும் , 3 ஆண்டுகள் என்ற குறைந்த பட்ச கால அளவுக்கு இந்த விசாக்கள் செல்லுபடியாகும். விசா காலத்தில் எவ்வளவு பணி இருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் புதிய விதிமுறைகளின் படி ஆன் சைட்டுக்கு ஊழியர்களை அனுப்பும் போது விசாக்காலம் முழுமைக்கும் ஊழியர்களுக்கு உள்ள பணிகள் குறித்து பட்டியலிட வேண்டும். விசா கோரும் காலம் முழுவதும் விண்ணப்பதாரர் அதே நிறுவனத்தில் ஊழியராக இருப்பதையும் மென்பொருள் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
இதன் மூலம் ஹெச் -பி(H-1B) விசாவுக்கான குறைந்தபட்ச கால அளவு 3 ஆண்டுகள் என்பதிலிருந்து குறைக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதே போன்று விசா காலத்தில் பணி ஒப்பந்தம் ஆன் சைட் நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டால், அந்த பணியாளருக்கு விசா நீட்டிப்பு வழங்கப்படாது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.