காட்சிக்கு காட்சி அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் பேசும் ஜிப்ஸி படத்திற்கு 'ஏ' சான்று!

குக்கூ, ஜோக்கர் எனும் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் , ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், சில அரசியல் கட்சி சார்ந்தவர்கள் விமர்சனங்களையும் வைத்தனர்.
மேலும் இப்படத்தில் வடமாநில அரசியல் கட்சி தலைவர், அதாவது வடக்கே ஒரு மாநிலத்தின் தலைவரை மறைமுகமாக தாக்கும் வண்ணம் இதில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
இப்படம் முழுவதும் ரெடியாகியும், இப்படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டது. இதனால் தற்போது மீண்டும் சென்சார் அனுப்பப்பட்டு, படத்திற்கு ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரை விமர்சித்ததற்காக ஏ சான்றா அல்லது படத்தின் உண்மையாகவே வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறதா என படம் ரிலீசானதால் தான் தெரியும்.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025