பிகில் பட நடிகைக்கு ஜோடியாக நடித்து வரும் ஜி.வி.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

Default Image

ஜிவி பிரகாஷ் மற்றும் அம்ருதா அய்யர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் ,அடங்காதே,ஜெயில் உள்ளிட்ட படங்கள் ரீலீஸ்க்கு தயாராகி உள்ளது . மேலும் 4g, காதலிக்க யாருமில்லை, காதலை தேடி, நித்யானந்தா, பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்து வருவதுடன் தனுஷின் D43 உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும் இவர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் .இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,சிவா மனசுல சக்தி, மிஸ்டர் லோக்கல்,பாஸ் என்கிற பாஸ்கரன், கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் ஜ.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா அய்யர் நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் படப்பிடிப்பினை தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.அந்ந படப்பிடிப்பு தளத்திலிருந்து ஜி.வி.பிரகாஷூடன் இவர்கள் அனைவரும் இணைந்துள்ள புகைப்படத்தினை டேனியல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.விரைவில் படத்தினை குறித்த கூடுதல் அப்டேட்ஸ் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்