இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். அதிரடி த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில், தற்போது சீனு ராமசாமி இயக்கும் இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரிசங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தேனியில் தொடங்கியது.
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…
சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…