ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம்.! டைட்டில் என்ன தெரியுமா.?
ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு கள்வன் என்று பெயரிடப்பட்டு இன்று முதல் அதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . சமீபத்தில் இவர் இசையமைப்பில் வெளியான சூரரை போற்று படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது .மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் ,அடங்காதே,ஜெயில் உள்ளிட்ட படங்கள் ரீலீஸ்க்கு தயாராகி உள்ளது .
இந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.”கள்வன்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை முண்டாசுப்பட்டி , ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.வி.சங்கர் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் நடிக்கும் இந்தப் படத்தில்அவருக்கு ஜோடியாக இவானா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் இருவரும் நாச்சியார் எனும் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சத்ய மங்கலத்தில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.