ஜிவி பிரகாஷின் அட்டகாசமான புகைப்படங்கள்.!
ஜி. வி. பிரகாஷ் குமார்இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகைகளை வசியம் செய்யும் அழகுடன் கூடிய ஸ்டைலிஷ் புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஜி. வி. பிரகாஷ் குமார், இவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் ஒரு நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவர். இவர் 2006ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.அதன் பின் டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இவரது நடிப்பில் 100% காதல், அடங்காதே, ட்ராப் சிட்டி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் கமல் பிரகாஷின் காதலிக்க நேரமில்லை படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக சூரரை போற்று, வாடிவாசல், தனுஷின் 43வது படத்தையும் தன் கைவசம் வைத்துள்ளாராம். சமீபத்தில் இவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக போட்டோஷூட் நடத்தி ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகைகளை வசியம் செய்யும் அழகுடன் கூடிய ஸ்டைலிஷ் புகைப்படங்களை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் ரூமியின் வரிகளான தனிமையாக உணரவேண்டாம், முழு பிரபஞ்சமும் உங்களுக்குள் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை பார்த்து பலர் ஜொல்லு விட்டு வருகின்றனர்.