வித்தியாசமாக ஸ்கோர் செய்யும் ஜி.வி.பிரகாஷ்! புதிய படத்தின் சுவாரஸ்ய ட்ரைலர்!

AdiyaeTrailer

‘ஏண்ட தலையில என்ன வெக்கல’ மற்றும் ‘திட்டம் இரண்டு’ படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கிய படம் ‘அடியே’. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, இயக்குனர் வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன், மதுமகேஷ் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோருடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது, இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.  ட்ரைலரின் தொடக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘யோஹன் அத்தியயம் ஒன்று’ படத்தின் 150வது நாளைக் கொண்டாடும் விழாவில் கேப்டன் விஜயகாந்த் கலந்துகொள்ள இருக்கிறார் என்று புரியாத புதிராகவும் வித்தியாசமாக காமெடி கலந்த வேடிக்கையாகவும் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் இதுவரை இல்லாத வகையில், முற்றிலும் மாறுபட்ட கதைக் களமாக அமைந்துள்ளது. இந்தபடத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக கோகுல் பெனாய் மற்றும் எடிட்டராக முத்தயன் யு ஆகியோர் பணியாற்றுகின்றனர். இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்