அசுரன் பின்னணி இசையை 8 நாட்களில் முடித்த ஜிவி பிரகாஷ்.!
அசுரன் திரைப்படத்தின் பின்னணி இசையை அமைக்கும் பணியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் 8 நாட்களில் முடித்துள்ளாராம்.
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தில் நடிகர் பசுபதி, மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, கென் கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. மேலும் தேசிய விருதை இந்த திரைப்படம் பெற்றது. படத்தின் கதை எந்தளவு சிறப்பாக இருந்ததோ அதைபோல் இசையும் மிகவும் அருமையாக இருந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் தீம் ம்யூசிக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பின்னணி இசையை அமைக்கும் பணியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் 8 நாட்களில் முடித்துள்ளாராம். படத்தின் பின்னணி இசை தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து ரசிகர்களையும் ரசிக்க செய்தது.