அமெரிக்க நகரின் வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு.! 18 பேர் காயம்.! 4 பேர் பலி.!

Default Image

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரை சுற்றி பல்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி  காவல்துறையினர் கூறுகையில், ‘ நாங்கள் முதல் நபரை அவொண்டேல் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க அன்டோனியோ பிளேர் எனும் நபரை துப்பாக்கி காயங்களுடன் கண்டறிந்தோம்’ எனவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும் கூறினார்.

மேலும், ஓவர்-தி-ரைன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 10 பேர் சுடப்பட்டனர் எனவும், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், ஒருவர் ஞாயிற்று கிழமை அதிகாலை நகரின் மேற்கு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளார்.

  இதுகுறித்து, அப்பகுதி மேயர் ஜான் கிரான்லி கூறுகையில், ‘ கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பார்கள் அடைக்கப்பட்டு இருப்பதால், சட்ட விரோதமாக மக்கள் ஒரு பகுதியில் கூடி மது, புகையிலை போன்றவற்றை பயன்படுவதாகவும், அப்போது துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் தான் உயிரிப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பொதுமக்கள் யாரும் சட்டவிரோத மது விருந்தில் கலந்துகொள்ள வேண்டாம். அப்படி கலந்துகொண்டால், நீங்களும் உயிரிழக்கும் அப்பாவி மக்களாய் இருப்பீர்கள்’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்