காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சண்டை – ஒருவர் பலி!
காபூல் விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும், அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு பல ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் அதிகளவிலான மக்கள் குவிந்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதுவரை காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கிச்சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அண்மையில் தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.
எனவே, அப்பகுதியில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தலிபான்கள், ஆப்கான் பாதுகாப்பு படை மற்றும் வெளிநாட்டுப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காபூல் விமான நிலையத்தில் வடக்கு நுழைவாயிலில் மர்ம நபர்கள் மற்றும் ஆப்கான் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சண்டையில் ஆப்கான் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் ஜெர்மன் படையினரும் ஈடுபட்டதாகவும் ஆனால் ஜெர்மனி வீரர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஜெர்மன் முப்படை தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heute Morgen um 04.13Uhr MESZ kam es am North Gate des Flughafens #Kabul zu einem Feuergefecht zwischen afghanischen Sicherheitskräften und unbekannten Angreifern. Eine afghanische Sicherheitskraft wurde dabei getötet, drei weitere verwundet. pic.twitter.com/4FLILE1NVA
— Bundeswehr im Einsatz (@Bw_Einsatz) August 23, 2021