கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் உலகில் நீளமான கால்களை கொண்ட இளம்பெண்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின், சிடார் பார்க்கை சேர்ந்த மேசி கர்ரின் என்ற இளம்பெண்ணின் இடதுகால் 135.26 செ.மீ, 134.3 செ.மீ நீளமும் கொண்டது. இவரது கால்கள் தான் உலகின் மிக நீளமான கால்கள். இவரது கால்கள் தான் உலகின் மிக நீளமான கால்கள் என கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார்.
இவரது கால்கள் ஒன்றரை அடி நீளம் உள்ளது. இவருடன் உடன் பிறந்த சகோதரிகள் இருந்தாலும், இவர் மட்டுமே உயரமாக உள்ளார். மேலும், இவரது உயரத்தை தொட வேண்டும் என்றால், ஸ்டூல் போட்டு தான் நிற்க வேண்டும்.
இதுகுறித்து அப்பெண் கூறுகையில், ‘எனக்கு நீண்ட கால்கள் இருப்பது சவாலாக உள்ளது. சில இடங்களில் கதவுகளை திறந்து நுழைவதும், கார்களில் ஏறுவதும், உயரத்திற்கேற்ற துணிகளை வாங்குவதும் கடினமாக இருந்தாலும், எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.