புதிய கின்ன்ஸ் சாதனை படைத்த பொலிவியா !
கேபிள் கார்கள் பயன்பாடு மலை பிரதேசங்களில் அதிக அளவு பயன்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த சேவை கின்ன்ஸ் சாதனையாக படைத்துள்ளது பொலிவியா.
பொலிவியாவில் உள்ள கேபிள் கார் சேவை உலகின் மிக நீண்ட தூர சேவையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அங்குள்ள லா பஸ் (La Paz) மற்றும் எல் அல்டோ (El Alto) நகரங்களுக்கிடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் கேபிள் கார்கள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில் கடந்த 2014ம் ஆண்டில் இந்த கேபிள்கார்கள் முதன்முறையாக தொடங்கப்பட்டன. இரைச்சல் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பயணத்தை வழங்குவதால் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 1 லட்சத்து 59 ஆயிரம் பயணிகள் நாள் ஒன்றுக்கு பயணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.