காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா.?

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் கதை பற்றி தகவல்கள் கிடைத்துள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தா,மற்றும் நயன்தாரா நடித்துவரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் கதையை பற்றி இணையதளத்தில் செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது. ஆம் இந்த படத்தில் ஒரு பையன் இரண்டு பெண்களை காதலிக்கும் கதைதான், மேலும் நானும் ரவுடிதான் திரைப்படத்தைப் போல் மிகவும் வித்தியாசமாக காமெடி கலந்த சிறப்பான திரைப் படமாக இருக்கும் என்றம் தகவல்கள் வெளியாகி உள்ளது.