கொய்யாவில் குழந்தைகளுக்கே இவ்வளவு நன்மை இருக்கிறதா! வாருங்கள் அறிவோம்!
பழங்கள் என்றாலே அதை இயற்கை வரம் என்று இன்னொரு வார்த்தையாலும் குறிப்பிடலாம். ஏனென்றால், நமது உடலில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும் தேவையற்ற கிருமிகளையும் அகற்றுவதற்கான அனைத்து மூலப்பொருட்களும் சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும், கொய்யாப் பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் மற்றும் சிறப்பு குணங்கள் அதிகம். குழந்தைகளுக்கு அது எவ்வளவு பயன் தருகிறது என்பது குறித்தும் இன்று நாம் பார்க்கலாம் வாருங்கள்.
கொய்யாவின் மருத்துவ நன்மைகள்
கொய்யாப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கொய்யாப்பழத்தை குழந்தைகளுக்கு விதையை நீக்கிவிட்டு சதையை எடுத்து கொடுக்கும் பொழுது உடல் சூடு தணிந்து மிகவும் குளிர்ச்சியாக காணப்படும். மேலும் குழந்தைகள் கொய்யாப் பழங்கள் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் குறையும். சிறிய பழமாக இருக்கும் பட்சத்தில் இரண்டு பழங்களை குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு கொடுக்கும்பொழுது மலச்சிக்கல் உள்ள குழந்தைகள் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட முடியும். குழந்தைகளின் உடலில்நோயெதிர்ப்புசக்தி அதிகரிப்பதுடன், பற்கள் ஆரம்பத்திலேயே வலுவுடன் வளரும்.
மேலும், பெரியவர்களுக்கும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடைவதுடன் பல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் முற்றிலும் குணமடையும். சருமம் பொலிவுடன் பளபளப்பாகவும் மாற உதவுகிறது. தோல் சுருக்கங்கள் நீங்க உதவுகிறது. மேலும் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த கொய்யாப்பழத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த கூடிய மூலப்பொருள் மூலமாக நீரிழிவு பிரச்னை தவிர்க்கப்படுகிறது. மேலும் மூல நோய் உள்ளவர்களுக்கும் இந்த கொய்யா பழம் மிகச் சிறந்த தீர்வாக காணப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தி வயிறு குடல் இரைப்பை கல்லீரல்ஆகிய உடல் உள்ளுருப்புகள் ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது. அஜீரண கோளாறுகளையும் நீக்குகிறது.