குவாத்தமாலாவில் 8 பேர் உயிரிழப்பு… 6,32,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
குவாத்தமாலாவில் பலத்த மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் ஒருங்கிணைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலாவில் (Guatemala) பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் ஒருங்கிணைப்பு National Coordination for Disaster Reduction (CONRED) தெரிவித்துள்ளது.
குவாத்தமாலாவில் கடுமையான வானிலை காரணமாக 6,32,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1,800 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 5,600 பேர் வெளியேற்றப்பட்டு, அவர்களை 340 க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மூன்று பாலங்கள் மற்றும் இரண்டு முக்கிய சாலைகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது என்றும் 80க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இருந்துளது எனவும் கூறியுள்ளது. குவாத்தமாலாவில் பொதுவாக மே முதல் அக்டோபர் வரை மழைக்காலம் நீடிக்கும். ஜூலை முதல் புயல், சூறாவளிகளால் நாடு பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.