GST அமல்படுத்தப்பட்ட பின் பொருட்களின் விலை 4%-8% குறைந்துள்ளது :அருண் ஜெட்லி

Default Image
புதுடெல்லி: ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின் பொருட்களின் விலையில் 4 முதல் 8 சதவீதம் குறைந்து விட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.டில்லியில் நடைபெற்ற பா.ஜ., ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி., வரி விகிதம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது, தனிப்பட்ட ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல; அனைத்து தரப்பினருக்கும் கிடைத்த வெற்றி. இதன்மூலம், வரி ஏய்ப்பு, வரி மோசடி, அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 8% விலை குறைவு ஜூலை 1ம் தேதிக்கு பின் அனைத்து பொருட்களின் விலையும் 4 முதல் 8 சதவீதம் வரை குறைந்துள்ளது. எதிர்காலத்தில் ஜி.எஸ்.டி.,யால் வளர்ச்சி அதிகரிக்கும்; வருவாய் 80 சதவீதம் வரை உயரும். ஒரு கோடிக்கும் அதிகமான வர்த்தகர்கள் ஒரே பொருளுக்கு பல்வேறு நிலைகளில் வெவ்வேறு வரி விதிப்பது தவிர்க்கப்பட்டதால், வரிச்சுமை வெகுவாக குறையும். ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் வர்த்தகசந்தை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி.,யில் தங்களை பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால் நாட்டின் உண்மைநிலை இதுவல்ல என தொடர்ந்து இடதுசாரிகள் கூறுகின்றனர். பிஜேபி அரசின் இந்த பொருளாதார கொள்கைகள் என்றைக்குமே பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இல்லை . மாறாக அது இந்திய பெருமுதலாளிகளுக்கு பயன்தரக்கூடிய வகையில் தான் உள்ளது . இதன் உதராணமாக பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையால் அப்பாவி மக்கள் 110 பேர் வங்கி வாசலில் நின்றே மாய்ந்து போனார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  பொது செயலாளர் சீதாராம் யெச்சுரி கூறினார்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்